×

மும்பை மால்வானி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு; 8 பேர் படுகாயம்

மும்பை: மும்பை மால்வானி பகுதியில் கட்டடம் இடிந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். 


இந்நிலையில் படுகாயம் அடைந்த 8 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதையடுத்து பலி எண்ணிக்கை கூடும் என கருதப்படுறது. இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகே உள்ள 3 மாடி கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் அதில் தங்கியிருந்த அனைவரும் வேறு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். எனவே விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



Tags : Malwani ,Mumbai , Mumbai: Four floors collapsed, killing 11 people
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு