×

மகாராஷ்டிராவில் முதலில் பாதித்தவர் கருப்பு பூஞ்சையில் இருந்து மீள நோயாளி ரூ.1.5 கோடி செலவு

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், விதர்பாவை சேர்ந்தவர் நவீன் பால்  (46). இவர்தான் இந்த மாநிலத்திலேயே கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி. கடந்தாண்டு செப்டம்பரில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினார். பின்னர், அவரது  பற்கள் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அப்போதே, இந்த அறிகுறிகள் குறித்து மருத்துவர்களிடம் நவீன் தெரிவித்துள்ளார். அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாளடைவில் இந்த நோய் அதிகமாகி, இந்தாண்டு பிப்ரவரியில் அவருக்கு ஒரு கண் அகற்றப்பட்டது. பின்னர், 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு கண்ணையும் மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். ஒட்டு மொத்த சிகிச்சைக்காக நவீன் இதுவரையில் ரூ.1.5 கோடி செலவு செய்துள்ளார். 6 மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்து, முகத்தில் 13 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. நவீனின் மனைவி ரயில்வே ஊழியர் என்பதால்  சிகிச்சைக்காக ரூ.1 கோடியை ரயில்வே துறையிடம் இருந்து பெற்றுள்ளார். மீதமுள்ள ரூ.48 லட்சத்தை அவரே கடன் வாங்கியுள்ளார்.

Tags : Maharashtra , The first victim in Maharashtra, a patient recovering from a black fungus cost Rs 1.5 crore
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி