×

‘டேட்டிங்’ வெப்சைட் மூலம் 2,000 பெண்களிடம் பாலியல் மோசடி: 65,000 ஆபாச படங்களை ‘லீக்’ செய்த காமவெறியன்

லண்டன்: இங்கிலாந்து உட்பட 20 நாடுகளை சேர்ந்த 2,000 பெண்களிடம் டேட்டிங் வெப்சைட் மூலம் மோசடி செய்த நபரை அந்நாட்டின் தேசிய குற்றவியல் ஏஜென்சி போலீசார் கைது செய்துள்ளனர். தனக்கு பணம் தராதவர்களின் 65,000 ஆபாச புகைப்படங்களை அவன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளான். சிறுமிகள், குழந்தைகள் பாலியல் பலாத்கார புகைப்படங்களையும் அவன் இணையத்தில் வெளியிட்டுள்ளான். அவனுக்கான தண்டனையை பர்மிங்காம் நீதிமன்றம் விரைவில் வழங்க உள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரைச் சேர்ந்தவன் 26 வயதான அப்துல்-ஹசீப் எலாஹி. இவன் எந்த வேலைக்கும் செல்லாமல், சொந்தமாக ‘சுகர் டேடி’ என்ற டேட்டிங் வெப்சைட் ஒன்றை நடத்தி உள்ளான். ‘டேட்டிங்’ விருப்பம் உள்ளவர்கள், பாலியல் உறவில் விருப்பம் உள்ளவர்களை அடையாளம் காணுதல், தொலைதூர பயணங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற செயல்களை தனது வெப்சைட் மூலமாக செய்து வந்தான்.

அந்த வலையில் சிக்கிய சிறுமிகள், இளம்பெண்கள், வயதான பெண்கள் என்று பலரிடமும் எலாஹி நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டான். அவர்களின் ஆபாச புகைப்படங்களை வாங்கி ரசித்து வந்தான். பின்னர், அவர்களிடம் ஆபாச படங்களை விற்று பல ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளான். அவர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்களது நிர்வாண, அரைகுறை ஆடையிலான படங்களை எலாஹிக்கு அனுப்பி உள்ளனர். முதலில் 5, 10 என்று இருந்த பெண்களின் தொடர்பு நூற்றுக் கணக்கில் சென்றது. சேகரிக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு, மேலும் பணம் பார்க்க ஆசைப்பட்டான். அதற்காக புகைப்படங்களின் தொகுப்பை ‘பாக்ஸ் செட்ஸ்’ மூலம் இவனை போன்ற மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கு அனுப்பி வைத்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளான்.

சில குறிப்பிட்ட பெண்களிடம், மேலும் மேலும் ஆபாசமான புகைப்படங்களை கேட்டு தொந்தரவு செய்துள்ளான். அவர்கள் மறுக்கும்பட்சத்தில், அவர்களின் ஆபாச புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளான். சிலர், இவனது மிரட்டலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பல பெண்கள், இவனை கண்டாலே மிகவும் பயந்து போயிருந்தனர். இவனிடம் இணங்கி போவதைத் தவிர வேறு வழியில்லை என்று கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். பெண் குழந்தை உள்ள வீட்டில் இருக்கும் பெண்கள், இவனது வலையில் சிக்கியிருக்கம்பட்சத்தில், அவர்களது குழந்தைகளின் பாலியல் படங்களையும் மிரட்டி வாங்கியுள்ளான். கொடூரமான பாலியல் குற்றவாளியான எலாஹியால், இங்கிலாந்தில் மட்டும் 196 இளம்வயது பருவத்தினர், பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை பலாத்காரம் உட்பட 65,000க்கும் மேற்பட்ட அநாகரீகமான புகைப்படங்களை இவன் இணையத்தில் லீக் செய்துள்ளான். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உட்பட 20 நாடுகளை சேர்ந்த கிட்டதிட்ட 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் இவனது வலையில் சிக்கியுள்ளனர். இங்கிலாந்தில் 600 பெண்களிடமும், அமெரிக்காவை சேர்ந்த 1,367 பெண்களிடமும் இவன் ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளான். அமெரிக்காவில் 15 வயது சிறுமியை எலாஹி மிரட்டி ‘பிளாக் மெயில்’ செய்தபோது, டிசம்பர் 19, 2018 அன்று தேசிய குற்ற ஏஜென்சி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். அவனது செல்போன் மற்றும் லேப்டாப்புகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்திய போது, இத்தனை குற்றங்களை அவன் செய்திருப்பது தெரியவந்தது. இத்தனை குற்றங்களுக்கும் பின்னணியில் மிலாஹியின் நண்பனான மிடில்செக்ஸைச் சேர்ந்த கிர்ஸ்டி நிக்கோலஸ் (35) என்பனுக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதால், அவர்களுக்கான தண்டனை வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் பர்மிங்ஹாம் கிரவுன் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

*  பாலியல் மனநலக் கோளாறு காரணமா?
‘பெடோபிலியா’ என்பது ஒருவகையிலான பாலியல் மனநலக் கோளாறு. அதாவது, 10 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினருக்கு பாலியல் உணர்வுகளை தூண்டிவிடுதல் அல்லது அனுபவித்தல் முறையாகும். இதுபோன்ற பாலியல் ‘சைக்கோ’ குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மூலமாகவே இதுபோன்ற குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. இதற்கு மனிதர், நாடு என்று எல்லைகள் கிடையாது. அந்தவகையில், எலாஹியுடன் இத்தகைய பாலியல் மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள். அழிக்க முடியாத அளவுக்கு குவிந்துள்ளது தன் மீது சுமத்தப்பட்ட 158 குற்றங்களையும் எலாஹி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான். மேற்கண்ட குற்றங்கள் யாவும், ஜனவரி 1, 2017 முதல் ஆகஸ்ட் 7, 2020 வரை செய்யப்பட்டன. இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் பாதிக்கப்பட்ட சில பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இன்னும் உலாவி வருகின்றன. கிட்டதிட்ட 18 மாதங்களுக்கும் மேலாக அந்த படங்களை இங்கிலாந்து போலீசார் தேடி அழித்து வருகின்றனர். ஆனால், இன்னும் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் இணையத்தில் பரவிக்கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

Tags : 2,000 women sexually abused by 'dating' website: 65,000 pornographers 'leaked' pornography
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...