×

மண்டல ஊரடங்கு அமலாக்க குழு 3 மடங்காக அதிகரிப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த மண்டலத்திற்கு ஒரு குழு என மொத்தம் 15 மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 15 மண்டங்களில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநகராட்சி, காவல் துறையினருடன் இணைந்து அமைக்கப்பட்ட மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுவினருக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால், நேற்று அம்மா மாளிகை கூட்டரங்கில் ஆலோசனைகளை வழங்கினர். இதில், ஊரடங்கு அமலாக்கக் குழுவினர் தங்கள் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் காலை முதல் மாலை  வரை ரோந்து பணியில் ஈடுபட்டு அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 9.4.2021 முதல் நேற்று வரை அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத 11,105 தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை தனி நபர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.2.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  மண்டலத்திற்கு ஒரு ஊரடங்கு அமலாக்க குழு என 15 மண்டலங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை மேலும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக மண்டலத்திற்கு இரு குழு வீதம் மேலும் 30 ஊரடங்கு அமலாக்கக் குழுக்கள் என மொத்தம் 45 குழுக்கள் நாளை (இன்று) முதல் செயல்படுத்தப்படவுள்ளன.   


Tags : Zonal Curfew Enforcement Committee , Zonal Curfew Enforcement Committee tripled: Corporation Information
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...