கொரோனோ குறைவு எதிரொலி சென்னையில் குருதி சார் அளவீடு ஆய்வு: மாநகராட்சி சுகாதாரத்துறை முடிவு

சென்னை: கொரோனோ பரவல் குறைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும்  குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக  அதிகாரிகள் கூறினர். கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில்  நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் டெல்டா கொரோனா தொற்று இருப்பதை, பெங்களூர் ஆய்வகம் உறுதி செய்துள்ளது. அதைப்போன்று சென்னையில் பொதுமக்களிடம் கொரோனோவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பதை கண்டறிய செரோ சர்வே (Sero survey)எனப்படும் குருதி சார் அளவீடு ஆய்வு தொடங்க சென்னை மாநகராட்சியின்  சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையொட்டி, தற்போது ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி எந்தெந்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கண்டறிந்து நோய்த்தொற்று தடுப்புப்பணிகளை அங்கு தீவிரப்படுத்த முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் சுழற்சி முறையில் இந்த பரிசோதனை மேற்கொள்ள பரிசோதனை குழுக்கள் அமைத்து வரும் வாரத்தில் பணிகள் தொடங்க உள்ளது.

Related Stories:

>