×

385 இயன்முறை டாக்டர்கள் கொரோனா நிதியாக ரூ.75 ஆயிரம் காசோலையை வழங்கினர்

சென்னை: தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரியும் இயன்முறை டாக்டர்கள் சங்கத்தினர் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை சந்தித்தனர். அப்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு, கொரோனா நிவாரண நிதிக்காக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிப்புரியும் 385 இயன்முறை டாக்டர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ.75 ஆயிரம் காசோலையை முதல்-அமைச்சர் கொரோனோ நிவாரண நிதிக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கினர்.இதையடுத்து, தங்களுக்கு, இதுவரை குறைந்த அளவிலான ஊதியம் வழங்கப்படுவதாகவும், படிப்புக்கும் பணிக்கும் ஏற்ற ஊதியத்தை உயர்த்தி வழங்கிடவும், இயன்முறை டாக்டர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை முதலான அனைத்து சலுகைகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


Tags : Corona Fund , 385 mechanical doctors presented a check for Rs.75 thousand as corona fund
× RELATED முஸ்லிம் லீக் 5 லட்சம் கொரோனா நிதி