×

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14ம் தேதி முடியும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: சுகாதாரத்துறை போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: கொரோனா பரவல் 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு கடந்த 7ம் தேதி முடிவடைந்தது. அதன்பிறகு 14ம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் சுகாதாரத்துறை, போலீஸ் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14ம் தேதி முடிவடைகிறது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையை திறக்கும் நிகழ்ச்சி மற்றும் திருவாரூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்கான பயணம் மேற்கொள்கிறார். இதன்காரணமாக முன்கூட்டியே ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டு, இன்று ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை, தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். சுகாதாரத்துறை, போலீஸ் துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மேலும் குறைந்துள்ளதால், மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா அல்லது ஊரங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chief Minister ,MK Stalin , Chief Minister MK Stalin's advice today as the curfew ends on the 14th: Health police officers participate
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...