×

தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் தலைமையாசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் வரும் 14ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

சென்னை: தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் தலைமையாசிரியர்கள்  மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றி வரும் 14ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக மாணவர் நலன்கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது, மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதால் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது.

 அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் 14ம் தேதி முதல் பணிக்கு வருகை புரிய வேண்டும். இதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Commissioner of School Education , Headmasters and office bearers working from primary to secondary school should come to work from the 14th: School Education Commissioner Announcement
× RELATED சிஇஓக்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர்...