×

தேனி மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் திருவாரூரில் இருந்து 2 ஆயிரம் மெ.டன் அரிசி ரயிலில் அனுப்பி வைப்பு

திருவாரூர் : திருவாரூரிலிருந்து தேனி மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 2 ஆயிரம் மெ.டன் அரிசி ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த காரீப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 7 லட்சத்து 71 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது.இந் நிலையில் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காகவும் அரிசி மற்றும் நெல் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து தேனி மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 40 வேகன்களில் 2 ஆயிரம் மெ.டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags : Theni District ,Thiruvarur , Thiruvarur: 2 thousand MT of rice was sent by train from Thiruvarur to Theni district for public distribution project.
× RELATED கோம்பை பகுதியில் வாகன...