×

டவ் – தே புயலை அடுத்து மிரட்டும் யாஸ் புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: வடக்கு அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிதாக யாஸ் புயல் உருவாகி வருவதால் அதுகுறித்து மீனவர்களை கடலோர காவல் படையினர் எச்சரித்துள்ளனர். அரபிக்கடலில் உருவான டவ் – தே புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு கரைகடந்தது.
தற்போது வடக்கு அந்தமான் அருகே கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகி உள்ளது. அது அடுத்த 72 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வருகிற 26ஆம் தேதி மாலை ஒடிசா, மேற்கு வங்கம் கடலோர பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள், விசைப்படகுகளை ஒலிபெருக்கு மூலம் எச்சரித்து வருகின்றனர்.
யாஸ் புயல் காரணமாக கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு வந்துள்ள மீனவர்கள் அருகில் உள்ள துறைமுக பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரையோர பகுதிகளில் உள்ள படகுகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டுசெல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். பேரிடர் மீட்புப்படைகள் மற்றும் மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post டவ் – தே புயலை அடுத்து மிரட்டும் யாஸ் புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cyclone Yas ,Bay of Bengal ,North Andaman ,Coast Guard ,
× RELATED வங்காள விரிகுடா, பெருங்கடல்கள்...