ஆம்பூர் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு

ஆம்பூர் :ஆம்பூர் அருகே அரசு சுகாதார மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். ஆம்பூர் அடுத்த நரியம்பட்டில் அரசினர் சுகாதார மருத்துவமனை  இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையின் ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதை அப்புறப்படுத்த நோயாளிகள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நல்லபாம்பு ஒன்று மருத்துவமனைக்குள் புகுந்து படமெடுத்தபடி நின்றது. இதைப்பார்த்த அதிர்ச்சையடைந்த ஊழியர்கள் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் தேடி பாம்பை பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More