×

ஏரிக்கால்வாயை ஜேசிபி கொண்டு தூர்வாரிய பொதுமக்கள்-அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் நடவடிக்கை

பொன்னை : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட வனப்பகுதிகளில் தற்போது பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள கலவகுண்டா அணை நிரம்பியது. கடந்த 6ம் தேதி மாலை அம்மாநில அரசு, அணையை திறந்தது. இந்த தண்ணீர் நேற்றுமுன்தினம் வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. ஆந்திர வனப்பகுதியில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் பொன்னையாற்றில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் எனக்கருதப்படுகிறது.

இந்நிலையில் பொன்னை ஆற்றிலிருந்து கீரைச்சாத்து ஏரி பகுதிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரப்படாததால் ஆற்று தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் ேவதனையடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து அடுத்து வரும் பருவமழை தண்ணீரையாவது சேமித்து வைக்க வழிவகை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தியும் வெளியானது. இந்நிலையில், அதிகாரிகள் யாரும் இதனை கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அவர்களாகவே கால்வாயை தூர்வாரி சீரமைத்தனர்.


Tags : JCP , Ponnai: Due to the continuous heavy rains in the forests of Chittoor district of Andhra Pradesh, the Kalavakunda dam there
× RELATED விவசாயிகள் டெல்லிக்கு ஜே.சி.பி....