பொலிவியா நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்பிக்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு: 2 பெண் எம்பிக்கள் உட்பட 5 பேர் காயம்!!

பொலிவியா : மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியா நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்பிக்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் லாபஸ் நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் நேற்று வழக்கமான கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது முன்னாள் இடைக்கால அதிபர் ஜியானான் மீதான கைது நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதன்மீதான விவகாரத்தில் உள்துறை அமைச்சர் பதில் அளித்துக் கொண்டு இருந்தார். அவரது பதிலில் திருப்தி அடையாத எதிர்கட்சியினர் முழக்கம் எழுப்பியபடி இருந்தனர்.

ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். விரைந்து வந்த சபை காவலர்கள் கைகலப்பில் ஈடுபட்ட எம்பிக்களை வெளியேற்றினர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 எம்பிக்கள் காயம் அடைந்தனர்.பெண் எம்பிக்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்பிக்களின் மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து பொலிவியா நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>