சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டால் ஒரே நாளில் பிளான் அப்ரூவல்: நிர்வாக அதிகாரி தகவல்

சுரண்டை: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பிளான் அப்ரூவல், பெயர் மாற்றம் மற்றும் இதர சான்றுகள் ஒரே நாளில் வழங்கப்படும் என சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கடகோபு தெரிவித்துள்ளார்.‌ இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்களை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்கும் விதமாக சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அத்தாட்சியுடன், சரியான ஆவணங்களுடன் பிளான் அப்புரூவல், பெயர் மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள், இதர சான்றுகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரே நாளில் ஆய்வு செய்து வழங்கப்படும்.

மேலும் தடுப்பூசி அதிகம் போட்டுக் கொண்டவர்கள் வசிக்கும் வார்டுகள், தெருக்களில் தேவைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்கப்படும். எனவே, அரசு தெரிவிக்கும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நம்மையும், நமது சமூகத்தையும் காத்திட தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>