8,000 டோஸ் கோவாக்சின் சென்னை வந்தடைந்தது

சென்னை: ஐதராபாத்தில் இருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு நேற்று 8 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தது. ஐதராபாத்தில் இருந்து நேற்று சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 74 கிலோ எடையில் ஒரு மருந்து பார்சல் வந்தது. அதில், சுமார் 8 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன. அவை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு தடுப்பூசிகளை அனுப்பாமல், தனியாருக்கு முக்கியத்துவம் கொடுத்து அனுப்பி வருகிறது. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>