மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு: புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது பாதிப்பு இருந்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்குவதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. ்அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

* ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை, அம்மாநிலத்தில் உள்ள கொரோனா வைரசின் தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

*  கொடுக்கப்படும் தடுப்பூசிகளை மாநிலங்கள் தரப்பில் வீணாக்கும் பட்சத்தில், அது ஒதுக்கீடுகளில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

* தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் வசதி படைத்தவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

* தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசியின் விலை நிர்ணயத்தை அதன் தயாரிப்பு நிறுவனங்கள்தான் மேற்கொள்ளும்.

* தடுப்பூசி செலுத்துவதற்கான சேவை கட்டணம் ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை மீறும் தனியார் மருத்துவமனைகளை மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், 2வது டோஸ்சுகாக காத்திருப்பவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதில் முன்னுரிமை வழங்கி தடுப்பூசிகளை மாநில அரசுகள் செலுத்த வேண்டும்.

* பொதுமக்களுக்கும் அதிக சிரமங்கள் இல்லாத வகையில் முன்கூட்டியே பதிவு செய்து அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

* இந்த புதிய நெறிமுறைகள் வரும் 21ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

Related Stories:

>