நாடு முழுவதும் இப்போதைக்கு நேரடி விசாரணை சாத்தியம் இல்லை: உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தகவல்

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும் கடந்தாண்டு மார்ச்சில் மூடப்பட்டது. பின்னர், தொற்று  குறைவு, ஊரடங்கு தளர்வால் கீழ் நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மீண்டும் தொடங்கியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் தற்போது வரை வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது, கொரோனா 2வது அலையின் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி சந்திரசூட், நீதிமன்ற விசாரணை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ்அதில் அவர், ‘‘நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால், தற்போதைக்கு உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் எந்த நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை. தொற்று பரவல் இறுதி முடிவுக்கு வரும் வரையில் இணையதளம், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே வழக்குகள் விசாரிக்கப்படும். தற்போது நேரடி விசாரணை என்பதை விட, மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பது பற்றியே நாம் பிராத்தனை செய்ய வேண்டும்,’’ என்றார்.

Related Stories:

More
>