இலவச மனைப்பட்டா குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

சென்னை: பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து துறை அதிகாரிகளுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் மா.மதிவாணன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநருடன், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளின் செயல்பாடுகள்,

துறையின் திட்டங்களின் முன்னேற்றம், விடுதிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல், மைய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள், மிதிவண்டிகள் வழங்குதல், தையல் இயந்திரங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்தும் சிறு குறு விவசாயிகளுக்கு மான்யம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

Related Stories:

>