×

பிளஸ் 1 வகுப்புகள் அடுத்த வாரம் துவக்கம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பிளஸ்1ல் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு இந்த மாதம் 3வது வாரத்தில் இருந்து அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி  பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி  ஆணையர் நந்தக்குமார் நேற்று வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார். இந்த  வழிகாட்டுதல்களை பின்பற்றி பிளஸ்2 வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வழிகாட்டு நெறிமுறைகள்:

* தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேனிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு, மாணவர்கள் சேர விரும்பும் நிலையில் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
* அந்தந்த பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம்.
* மிக அதிகமான விண்ணப்பங்கள் எந்த பாடப்பிரிவுக்கு வருகிறதோ, அதற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அந்த பாடப் பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கொண்ட தேர்வு வைக்க வேண்டும். அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பாடப் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
* பிளஸ் 1ல் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3வது வாரத்தில் இருந்து, கொரோனா தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை நடத்தலாம்.
* 2021-2022ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத் தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்தலாம்.
இவ்வாறு கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் வந்தால் ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம்.
* மிக அதிகமான விண்ணப்பங்கள் வரும் பாடப்பிரிவில் மாணவர்களுக்கு தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கலாம்.

Tags : Plus 1 classes start next week: Guidelines released
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...