×

மதுரையில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வார்டு தொடக்கம்

மதுரை: கொரோனா 3ஆம் அலை அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது. 3ஆம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட கூடும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கென்றே தேவைப்படும் தீவிர சிகிச்சை பிரிவுகள், இன்குபேட்டர், நெபுலேஸர் போன்ற கருவிகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் என்று மருத்துவ கட்டமைப்புகளை இப்போதிருந்தே வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சைகள் வழங்கி உடல்நிலை மாற்றங்களை கண்காணிக்க ஜீரோ டிலே வார்டு என்ற பெயரில் வார்டு தொடங்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக 11 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு பிரிவில் தற்போது இரு குழந்தைகள் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும் இந்த வார்டில் தேவைப்படும் பட்சத்தில் ஒரேநாளில் கூடுதலாக படுக்கைகள் வசதி செய்யப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.



Tags : Corona Treatment Ward ,Maduro , corona
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...