×

மனிதர்களை போல விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி: ரஷ்யா அசத்தல்

மாஸ்கோ: ரஷியாவில் விலங்குகளுக்காக உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி செல்லப்பிராணிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் உகான் நகரில்  கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.   கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. தொற்றை வெல்லும் ஒரே ஆயுதமான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மனிதர்களை போல விலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதர்களை போல விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு இருந்தது. அதன் அடிப்படையில் கார்னிவக்-கொவாக் என்ற தடுப்பூசியை ரஷ்யா வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி முதல் முறையாக விலங்கிற்கு செலுத்தப்பட்டது. ரஷ்ய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள செல்லப்பிராணி நாய்க்கு கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே விலங்குகளுக்கு என்று தனியே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த சாதனையை ரஷ்யா நிகழ்த்தியுள்ளது. செல்லப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தடுப்பூசி கண்டுபிடிப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Tags : Russia , Corona vaccine for animals as well as humans: Russia is ridiculous
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...