கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கரும்பூஞ்சை!: புதுக்கோட்டையில் கரும்பூஞ்சை நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு...பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கரும்பூஞ்சை நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் தாக்கி வருவதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில்  கரும்பூஞ்சை நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த க்கோட்டை மாவட்டபாச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த சின்னாகுட்டை என்பவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு  கரும்பூஞ்சை பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சின்னாகுட்டை அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டையில் கரும்பூஞ்சை ஏற்கனவே மூன்று பேர் கரும்பூஞ்சை பாதிப்பால் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை முடிந்து குணமடைந்த அனைவருக்கும் கொரோனாவுக்கு பின் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்திட வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>