ஒடிசாவில் கிளை சிறையில் 70 கைதி, 5 சிறைத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

ராய்கடா: ஒடிசா மாநிலத்தில் உள்ள கிளை சிறை ஒன்றில் 70 கைதிகளுக்கும், 5 சிறைத்துறை பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 அலை தற்போது குறைய தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் 63 நாட்களுக்கு பிறகு 1 லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு சென்றுள்ளது. இந்நிலையில் சிறைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராய்கடா மாவட்டத்தில் உள்ள குரும்பூர் என்ற நகரத்தில் கிளை சிறைச்சாலை ஒன்று உள்ளது. சிறு குற்றங்களில் ஈடுபட்டு விசாரணை கைதிகள் 113 பேர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 70 கைதிகளுக்கும், 5 சிறைத்துறை ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு இலக்கான கைதிகள் அனைவரையும் தனிமைப்படுத்திய சிறை அதிகாரிகள் தொற்று இல்லாத 43 கைதிகளை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 பேரும் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறையில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் உடன் இருந்த கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>