×

புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறப்பு; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது புதுச்சேரி மாநில அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுக்கடைகளில் மது அருந்தவும், பார்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு கடற்கரைகள், வழிகாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


புதுச்சேரியில் காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளையும் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் 50% பணியாளர்களுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுநுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கவும் கூறப்பட்டுள்ளது.



Tags : Novatcheri , Pondicherry, Liquor Stores, Opening, Relaxation, Curfew
× RELATED நாளை மறுநாள் உள்ளாட்சி தேர்தல் மனு...