ஐகோர்ட்டில் தகவல் புதிய அரசு வக்கீல் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படும்

மதுரை: மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளைக்கான அரசு வக்கீல் நியமனம் செய்ய  முறையாக விதிகளை பின்பற்ற வேண்டும். நியமன நடைமுறைகளை இணைய தளங்களில் வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அரசு மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘தற்போது புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் அனைத்தும் விதிப்படியும், ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை பின்பற்றியும் முறையாக மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

Related Stories: