தொலைக்காட்சி, செல்போனால் விபரீதம்: ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயற்சி

திருச்சி: திருச்சியில் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்ற பின்னணியில் கைபேசியும்,தொலைக்காட்சி பெட்டியும் இருந்தது விசாரணையின் மூலமாக தெரிய வந்துள்ளது. குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியதாக குடும்ப தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி துவாக்குடி வா.உ.சி நகரை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நந்தகுமாரின் மனைவி மற்றும் 2 மகள்களும், மகனும் அரளிவிதையை அரைத்துக்குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் அவரது இளையமகள் திவ்யாவும், மகன் விக்னேசும் உயிரிழக்க மனைவியும், மூத்த மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியதாக நந்தகுமாரை கைது செய்தனர். மகள்களும், மகனும் கைபேசியிலேயே மூழ்கி இருப்பதாகவும், மனைவி சித்ராதேவி தொலைக்காட்சியிலேயே மூழ்கி இருந்ததாகவும் நந்தகுமார் அதிருப்தியில் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் கைபேசியையும், தொலைக்காட்சி பெட்டியையும் ஒரு பெட்டியில் அடைத்து பூட்டியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த சித்ராதேவி அரளிவிதையை அரைத்து பிள்ளைகளுக்கு கொடுத்ததோடு தானும் உண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Related Stories:

>