×

திண்டிவனத்தில் பரபரப்பு ஆம்புலன்சில் வந்த கொரோனா நோயாளியை சாலையில் இறக்கிவிட்டு சென்ற ஊழியர்கள்-வலிப்பு வந்ததால் கடும் அவதி

திண்டிவனம் : திண்டிவனத்தில் கொரோனா நோயாளியை சாலையில் விட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் சேடன்குட்டை தெரு ஜேபி நகரை சேர்ந்தவர் சிற்றரசு (50). இவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வீட்டிற்கு அழைத்துச்செல்லாமல் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவரது வீட்டின் தெருமுனையில் இறக்கி சாலையோரம் படுக்க வைத்துவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

இதனால் அந்த நோயாளி சாலையிலேயே படுத்து கிடந்தார். அப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு திடீரென வலிப்பு வந்ததால் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் கொரோனா நோயாளி என்பதால் அருகில் செல்லவில்லை. பின்னர் அவரை அடையாளம் கண்டவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பல மணி நேரம் கழித்து உறவினர்கள் வந்து நோயாளியை மாற்று வாகனத்தில் அழைத்துச் சென்றனர். ஆம்புலன்சில் வந்த நோயாளியை உறவினருக்கு தெரிவிக்காமல், சாலையிலேயே இறக்கிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Tindivanam , Tindivanam: An ambulance crew left a corona patient on the road in Tindivanam.
× RELATED திண்டிவனம் அருகே 13 வயது சிறுமியிடம்...