×

ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது : அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

சென்னை : ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் புரிவோருக்கு இபதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரே நேரத்தில் சுயதொழில் செய்வோர் அதிக அளவில் பதிவு செய்ய முயன்றதால் இ- பதிவு இணையதளம் முடங்கியது.

இதையடுத்து இ- பதிவு இணையதளம் முடங்கியது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ -பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது.இ - பதிவு இணையதளத்தை சராசரியாக 6 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்.இ - பதிவு இணையதளத்தை அதிகபட்சமாக 12 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் தாங்கும்.6 லட்சம் பேருக்கு பதில் 10 மடங்கு அதிகமாக 60 லட்சம் பேர் இணையத்தை பயன்படுத்த முயன்றதால் இணையதளம் முடங்கியது.முடங்கி உள்ள இ - பதிவு இணையதளம் மாலைக்குள் சீரமைக்கப்படும், என்றார். தொடர்ந்து பேசிய அவர், தி பேமிலி மேன் -2 தொடரை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும் ஆனால் அதனை தடை செய்ய அதிகாரம் இல்லை என்றும் தி பேமிலி மேன் -2 தொடரை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.


Tags : Minister ,Mano Dandaraj , மனோ தங்கராஜ்
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...