×

ஒன்றரை மாத ஊரடங்கிற்கு பின்னர் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: புதிய தளர்வுகள் அமல்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று குறைந்ததால் அறிவிக்கப்பட்ட புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. கடைகள், மார்க்கெட்டுகள், அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியது. டெல்லியில் நேற்று 381 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து டெல்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சந்தை மற்றும் வணிகவளாகங்களில் உள்ள கடைகள் சுழற்சி முறையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


மெர்டோ ரயில் சேவை 50 சதவிகித பயணிகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஒன்றரை மாத ஊரடங்கிற்கு பின்னர் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். தனியார் நிறுவனங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றவே அனுமதிக்க வேண்டும் நிறுவனங்களுக்கு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. 



Tags : Delhi ,Amal , Metro rail in Delhi, service, new relaxations
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...