×

தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று அமல்

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று அமலானது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, 14-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


அனுமதி வழங்கப்பட்டவை:


* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப்பதிவு செய்ய அனுமதி.

* மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் செயல்பட அனுமதி.

*  வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். 

* டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி.

*  இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் இயக்க அனுமதி.

* மின் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி

* மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் செயல்பட அனுமதி.

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப்பதிவு செய்ய அனுமதி.

* மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.

* தனியாக செயல்படுகின்ற காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை திறக்க அனுமதி.

* நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிக்கு அவசர காரணங்களுக்கு செல்ல அனுமதி

* உணவுத் தேவையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் தன்னார்வலர்கள், இ-பதிவுடன் செல்லலாம்

* மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் தனியொருவர் செல்ல வேண்டும் என்றால், மருத்துவ அவசர காரியங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு மட்டும் இ-பதிவுடன் செல்லலாம்

* மாவட்டத்திற்கு உள்ளே மருத்துவ அவசர காரியங்கள், இறுதிச் சடங்குகளுக்கு இ-பதிவு இல்லாமல் செல்லலாம்.

* விமானம், ரெயில் மூலம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக https://eregister.tnega.org மூலம் இ-பதிவு செய்து பயணிக்கும் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* ரத்த வங்கிகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு அனுமதி

* அவசர பயணங்களுக்காக விசா வழங்கும் நிறுவனங்கள், குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கலாம்.



Tags : Amal ,Corona ,Tamil Nadu , In Tamil Nadu, 11 districts have been relaxed
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...