×

தமிழகம் முழுவதும் 26 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 26 எஸ்பிக்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி பொன்னி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிஐடி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி துரை சென்னை தலைமையிட ஏஐஜியாகவும், போச்சம்பள்ளி தமிழ்நாடு கமாண்டன்ட் 7வது பட்டாலியன் எஸ்பி சம்பத்குமார் சென்னை காவலர் நலன் ஏஐஜியாகவும், சென்னை சிவில் சப்ளை சிஐடி எஸ்பி சாந்தி சென்னை மாநில மனித உரிமை ஆணையம் எஸ்பியாகவும், நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் மகேஷ்குமார் சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபா சத்யன் சென்னை ரயில்ேவ எஸ்பியாகவும், விருதுநகர் மாவட்ட எஸ்பி பெருமாள் சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும், ராணிப்பேட்டை  எஸ்பி சிவக்குமார் தமிழ்நாடு போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு துணை இயக்குனராகவும், மதுரை மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சுகுமாறன் கடலோர அமலாக்க பிரிவு எஸ்பியாகவும்,

காஞ்சிபுரம் எஸ்பி சண்முக பிரியா சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள சுப்புலட்சுமி சென்னை மதுவிலக்கு குற்றப்பிரிவு எஸ்பியாகவும், கடலோர அமலாக்கப் பிரிவு எஸ்பி அசோக் குமார் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும், நீலகிரி எஸ்பி பாண்டியராஜன் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு 7வது பட்டாலியன் கமாண்டன்ட ஆகவும், மதுரை மாநகர தலைமையிட துணை ஆணையர் பாஸ்கரன் மதுரை மண்டல சிவில் சப்ளை எஸ்பியாகவும், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி கிங்ஸ்லின் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், சென்னை மாநகர தலைமையிட துணை கமிஷனர் அதி வீரபாண்டியன் திருச்சி ரயில்வே எஸ்பியாகவும், விழுப்புரம் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் சென்னை ஆவடி வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெத்து விஜயன் சென்னை மாநில நவீன காவல் கட்டுபாட்டு அறை எஸ்பியாகவும், சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி குணசேகரன் நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பியாகவும்,

சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சந்திரசேகரன் வேலூர் 15வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும், சென்னை மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி தங்கவேல் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு-2 எஸ்பியாகவும், சென்னை ரயில்வே எஸ்பி பழனிக்குமார் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும், சென்னை மாநில நவீன காவல் கட்டுபாட்டு அறை எஸ்பி ஸ்டாலின் சென்னை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாகவும், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு-2 எஸ்பி சுரேஷ்குமார் பூந்தல்லி 13வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும், வேலூர் 15வது பட்டாலியன் கமாண்டன்ட் செந்தில் குமார் புதுடெல்லி 8வது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல் கமாண்ட்னட் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Home Secretary ,Prabhakar , Action change of 26 SPs across Tamil Nadu: Home Secretary Prabhakar orders
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...