×

தென் மாவட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு அதிகரிப்பு

நெல்லை: கொரோனா 2வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயங்கி வருகின்றன. இருப்பினும் பல்வேறு ரயில்கள் 60% காலி இருக்கைகளுடன் செல்கின்றன. இந்நிலையில் இன்று (7ம் தேதி) முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் காரணமாக சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கும் முன்பதிவுகள் நேற்று அதிக அளவில் நடந்தன.  நெல்லை உள்ளிட்ட ெதன்மாவட்ட ரயில் நிலையங்களில் நேற்று வரிசையில் நின்று பயணிகள் முன்பதிவுகளை மேற்கொண்டனர். இவ்வாரம் முதல் ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில் ‘‘முழு ஊரடங்கில் வாடகை டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்க அனுமதியில்லை.

இதன் காரணமாக பலர் வெளியூர்களுக்கு செல்ல தயக்கம் காட்டினர். இறங்கும் இடத்தில் இருந்து வீடுகளுக்கு செல்ல வாடகை வாகனங்கள் கிடைக்காது என்பதால் வெளியூர் வாகனங்களை தவிர்த்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக இனிமேல் ரயில் நிலையங்களில் இருந்து எளிதாக வாடகை வாகனங்களில் நினைத்த இடங்களுக்கு செல்ல முடியும். எனவே மும்பை, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு முன்பதிவுகளை மேற்கொண்டு வருகிறோம். கோடைகாலம் நிறைவு பெற்றதால் மும்பைக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது’’ என்றனர்.

Tags : Southern District Railway Stations , Increase in bookings at Southern District Railway Stations
× RELATED தென்மாவட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் நலவாரிய குழு ஆய்வு