24ம் தேதி நடைபெற இருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு ஜூலை 24ல் தொடங்க முடிவு

புதுடெல்லி: வரும் 24ம் தேதி தொடங்க இருந்த 2021ம் ஆண்டுக்கான சிஏ  தேர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக இந்திய பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது.  கொரோனா 2வது அலையின் தாக்குதல் நாடு முழுவதும் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக, தேர்வு எழுதுபவர்களின் நலன் கருதி, ஜேஇஇ, முதுகலை  நீட் தேர்வுகள், ஐஐடி தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், ‘சிஏ’ எனப்படும் பட்டய கணக்காளர்களுக்கான தேர்வும்  ஒத்திவைக்கப்படுவதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது.  வரும் 24ம் தேதி இத்தேர்வுகள் தொடங்கப்பட இருந்த நிலையில், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுகள் ஜூலை 24ம் தேதி மீண்டும் நடத்தப்படும்  என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.  இதே போன்று  சிஏ இறுதி தேர்வுகள், இடைநிலை தேர்வுகள் ஜூலை 5ம் தேதி தொடங்க  திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த அட்டவணையும்  மாற்றப்பட்டு உள்ளது. இந்திய பட்டய கணக்காளர் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், திருத்தி அமைக்கப்பட்ட  புதிய அட்டவணையை பார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: