ராணுவத்திலும் ‘அரசியல்’ ஓய்வு பெற்று 4 ஆண்டுக்கு பின் 2 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: வி.கே.சிங் ஆதரவாளர்கள் என பழிவாங்கல்

புதுடெல்லி:  ராணுவத்தில் புலனாய்வு பிரிவில் பிரிகேடியர் பதவியில் இருந்த  அதிகாரி நலின் பாட்டியா. கல்வி படை பிரிவை சேர்ந்த அதிகாரி வி.என்.  சதுர்வேதி. இவர்கள் இருவரும் கடந்த 2015ம் ஆண்டு மேஜர் ஜெனரல் பதவி  உயர்வுக்காக பரிசீலிக்கப்பட்டனர்.  ஓய்வு பெறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு  முன்னால்   அவர்களுக்கு பதவி உயர்வு  வழங்கப்பட வேண்டும். ஆனால்,  பதவி உயர்வு கிடைக்கவில்லை.  இதனை தொடர்ந்து, இரு  அதிகாரிகளும் ராணுவ தீர்ப்பாயத்தை அணுகினர். இருவரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அங்கு நடந்த விசாரணையின் போது ராணுவ அதிகாரிகள்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   ‘பதவி உயர்வுக்கான அனைத்து அளவுகோல்களையும் இரு அதிகாரிகளும் பூர்த்தி  செய்து இருந்தனர். அனைத்து அதிகாரிகளாலும் பதவி உயர்வுக்கு பரிந்துரை  செய்யப்பட்டனர். தகவல் அறியும்  உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல்  செய்யப்பட்ட மனுவிலும், அவர்களை தேர்வு செய்யாததற்கான காரணங்கள்  வெளியிடப்படவில்லை. பதவி உயர்வுக்கான தகுதிகள் இருந்தும் அவர்களுக்கு பதவி  உயர்வு வழங்கப்படவில்லை,’ என்று வாதிட்டார்.  

 இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர்கள்  இருவரும் ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் ஆன போதிலும் அவர்களுக்கு பதவி உயர்வு  வழங்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து. நலின் பாட்டியா, சதுர்வேதிக்கு ஓய்வு பெற்ற பிறகு 4 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வு வழங்குவதற்கான உத்தரவை ராணுவம் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், அவர்களுக்கு இந்த பதவிக்குரிய சம்பள நிலுவை, இதர பயன்கள் அளிக்கப்பட உள்ளன. தற்ேபாது, மத்திய அமைச்சராக உள்ள வி.கே.சிங், ராணுவ தளபதியாக இருந்தபோது அவருக்கு விசுவாசிகளாக இருந்ததாக கூறி, தங்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படாமல் பழி வாங்கப்படுவதாக ராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். பாட்டியாவும், சதுர்வேதியும் கூட இந்த பழிவாங்கலுக்கு இரையானதாக கூறப்படுகிறது.

Related Stories:

>