×

சின்னமனூரில் நடமாடும் காய்கறி வாகனங்களில் ஆய்வு

சின்னமனூர்: சின்னமனூர் நகர் மற்றும் 14 கிராம ஊராட்சிகளில் வேளாண், தோட்டக்கலைத்துறை சார்பில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்கறிகள் உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலையை காட்டிலும் கூடுதல் விலையில் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று தேனி வேளாண்மை துணை இயக்குனர் வளர்மதி தலைமையில் வாகனங்களில் காய்கறி விற்பனையில் கூடுதல் விலையில் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

அப்போது சில வாகனங்களில் காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை கண்டித்து எச்சரித்தனர். தொடர்ந்து அந்த வாகனங்களில் உழவர்சந்தை விலை பட்டியலை தினந்தோறும் ஒட்டி விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உடன் உதவி வேளாண்மை இயக்குனர் பாண்டி, உதவி அலுவலர் புகழேந்தி, அட்மா திட்ட அலுவலர் கண்ணன் ஆகியோர் இருந்தனர்.

Tags : Chinmanur , Inspection of mobile vegetable vehicles in Chinnamanur
× RELATED சின்னமனூரில் கால்வாய் பாதை...