×

கூடலூரில் புதர்மண்டிக் கிடக்கும் விஏஓ அலுவலகம்: சீரமைக்க கோரிக்கை

கூடலுார்: கூடலூரில் புதர்மண்டிக் கிடக்கும் விஏஓ அலுவலக வளாகத்தில் விஷஜந்துகள் நடமாடுகின்றன. இதனால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இதை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சியில், 1வது மற்றும் 2வது வார்டு உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய மேலக்கூடலுார் வடக்கு கிராம நிர்வாக அலுவலகம், லோயர்கேம்ப், 13வது வார்டு உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய மேலக்கூடலுார் தெற்கு கிராம நிர்வாக அலுவலகம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய பகுதிகள் அடங்கிய கீழக்கூடலுார் கிழக்கு கிராம நிர்வாக அலுவலகம், 6, 7, 8 உள்ளிட்ட வார்டுகள் அடங்கிய கீழக்கூடலுார் மேற்கு கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய 4 கிராம நிர்வாக அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்திருந்த பழைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.  இந்த அலுவலகத்திற்கு தினசரி வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் கோரி பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், வளாகத்தைச் சுற்றிலும் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், பாம்புகள் அடிக்கடி நடமாடுவதாக கூறப்படுகிறது. இதனால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வளாகத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் அதிகமாக வருவதில்லை. எனவே, இந்த சமயத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களை சூழ்ந்துள்ள புதர்களை அப்புறப்படுத்தி, பொதுமக்கள் அமருவதற்கு இடவசதி ஏற்பாடு செய்ய, வருவாய்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : VAO ,Putharmandi ,Cuddalore , VAO office at Budar Mandik in Cuddalore: Request to renovate
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!