×

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை: சூறாவளி காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு: வெப்பச்சலனம் மற்றும் குமரிக்கடல், இலங்கை ஓட்டி(3.1 முதல் 4.6. கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும்; கோவா, கர்நாடகா கடலோர பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை(1 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், இன்று தமிழ்நாட்டின் ஒரு சில வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனம் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் 9 செ.மீ, எட்டயபுரம் 8 செ.மீ, மதுரை மாவட்டம் பேரையூர் 7 செ.மீ, திருவண்ணாமலை தண்டாரம்பேட்டை, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி தலா 6 செ.மீ, பெரம்பலூர், தர்மபுரி மாவட்டம் அரூர் தலா 5 செ.மீ, கொடைக்கானல், அரவக்குறிச்சி, பெரியாறு, தளியில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இன்று கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேத்தில் வீசக்கூடும். 8, 9ம் தேதிகளில் கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Center Warning , Heavy rains in a few places in Tamil Nadu today due to atmospheric circulation: Fishermen do not go to sea due to hurricane force winds; Chennai Meteorological Center Warning
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...