×

தமிழகத்தில் 21,410 பேருக்கு கொரோனா பாதிப்பு சிகிச்சை பெற்று வந்த 32,472 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்: சிகிச்சை பலனின்றி 443 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று  21,410 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32,472 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பலனின்றி நேற்று 443 பேர் உயிரிழந்தனர். சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று 1,75,365 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21,410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,16,812 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 11,652 பேர் ஆண்கள், பெண்கள் 9,758 பேர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 32,472 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,57,463 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 443 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 166 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 277 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 26,571 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்றைய மொத்த பாதிப்பில் அரியலூர் 192, சென்னையில் 1,789 பேர், செங்கல்பட்டு 862, கோவை 2663, கடலூர் 590, தருமபுரி 370, திண்டுக்கல் 298, ஈரோடு 1,569, கள்ளக்குறிச்சி 226, காஞ்சிபுரம் 372, கன்னியாகுமரி 633, கரூர் 322, கிருஷ்ணகிரி 358, மதுரை 468, நாகப்பட்டினம் 510, நாமக்கல் 682, நீலகிரி 517, பெரம்பலூர் 158, புதுக்கோட்டை 137, ராமநாதபுரம் 133, ராணிப்பேட்டை 283, சேலம் 1,171, சிவகங்கை 146, தென்காசி 291, தஞ்சாவூர் 929, தேனி 391, திருப்பத்தூர் 336, திருவள்ளூர் 525, திருவண்ணாமலை 482, திருவாரூர் 431, தூத்துக்குடி 358, நெல்லை 271, திருப்பூர் 1,104, திருச்சி 651, வேலூர் 245, விழுப்புரம் 471, விருதுநகர் 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 21,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , In Tamil Nadu, 32,472 people who were treated for 21,410 corona infections have recovered and returned home: 443 people died without treatment.
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...