×

45 நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் கணக்கு முடக்கம்: வாட்ஸ்அப் அறிவிப்பு

புதுடெல்லி:  ‘கணக்கு தொடங்கப்பட்ட பிறகு 45 நாட்களுக்கு அதை பயன்படுத்தவில்லை என்றால், அந்த கணக்கு முடக்கப்படும்,’ என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தனிநபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தகவல்களை தொடர்ந்து பாதுகாக்கவும், பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்காகவும் புதிய செயல்பாடுகளை வாட்ஸ்அப்  நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை அது கொண்டு வந்துள்ளது, இந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், கணக்கு தொடங்கப்பட்ட பிறகு பயனாளர்கள் அதை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்தால், 2 நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் கணக்கை நீக்குவதற்கு வாட்ஸ்அப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  இதன்படி, அந்த கணக்கில்  இருக்கும் அனைத்து தகவல்களும் அழிக்கப்படும். அதே நேரம், பயனாளர்கள் ‘பேக் அப்’ வசதியை பயன்படுத்தி, அதே எண்ணில் மீண்டும் வாட்ஸ்அப் வசதியை பதிவு செய்தும் அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெறலாம்.

* ஒரு வாட்ஸ்அப் கணக்கு தொடர்ந்து 4 மாதங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அந்த கணக்கு நீக்கப்படும். அதாவது, வாட்ஸ்அப் கணக்குள்ள போன், இணையதள வசதி பெற்றிருந்து, வாட்ஸ்அப் வசதியை பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலற்றதாக கணக்கில் கொள்ளப்படும்.  அந்த வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்.
* மற்றொரு முறையில் ஒரு பயனாளர் தொடர்ந்து 45 நாட்களுக்கு இணையதள வசதியை பெறாமல் வாட்ஸ்அப் வசதியை பயன்படுத்தாமல் இருந்தாலும், அது செயலற்றதாக கருதப்பட்டு அந்த கணக்கை வாட்ஸ்அப் நிறுவனம் நீக்கும்.

Tags : Account freeze if not used for 45 days: WhatsApp Notification
× RELATED புதுவையில் பாஜ-காங். அடிதடி