தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: 30% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி !

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, நோய் பரவல் அதிகம் இருக்கும் கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் பிற மாவட்டங்களில் தளர்வுகளுடன் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் ஜூன் 14ம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்.

* தொற்று குறைவான பகுதிகளில் மளிகை, காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படலாம்.

* இறைச்சிக்கடைகள், பழங்கள், பூக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* இ-பதிவு பெற்று வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* எலக்ட்ரிகல் கடை, ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலத்துக்கு அவசர காரணங்களுக்காக இ-பதிவு பெற்று பயணிக்க அனுமதி

* கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரையில் ஏற்றுமதி நிறுவனங்கள் 10% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* டாஸ்மாக் மற்றும் சலூன், தேநீர் கடைகளை திறக்க அனுமதியில்லை.

Related Stories:

>