ஒரே ஆண்டில் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு

புதுடெல்லி: ஓராண்டுக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கூட்டம் நேற்று காணொலி மூலமாக நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது: எப்போது எல்லாம் மனித இனம் துன்பப்படுகிறதோ, அப்போது எல்லாம் ஒரு புதிய பாதையை அறிவியல் அமைத்து கொடுக்கும். அறிவியலின் இந்த பங்களிப்பு தற்போது இந்தியாவிலும், உலகமெங்கும் சிறப்பாக நிகழ்ந்து வருகிறது.  இந்த நூற்றாண்டில் மிகப்பெரும் சவாலாக கொரோனா வைரஸ் உருவானது. ஆனால், வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள்ளேயே நம் விஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்கினர்.

குறிப்பாக, ஆத்ம நிர்பார் திட்டத்தை சிறப்பிக்கும் விதமாக இந்தியா தனது கோவாக்சின் தடுப்பூசியை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியின் வேகம் அதிகரித்திருக்கிறது. இது விஞ்ஞானிகளாகிய உங்களின் மகத்தான திறமையாலும், பங்களிப்பாலும் நடந்துள்ளது. உங்களால் கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>