கட்சி பெயரில் மோசடி இல்லை ஜெகன் மீதான வழக்கு டிஸ்மிஸ்

புதுடெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைவராக உள்ள கட்சியின் பெயர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். இக்கட்சியின் முழு பெயர், ‘யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ்’ என்பதாகும்.  இந்நிலையில், கட்சியின் முழு பெயரான ‘யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ்’ என்ற பெயரை பயன்படுத்தாமல், அதன் சுருக்கமான ‘ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்’ கட்சி என மோசடியாக பயன்படுத்தி வருகிறார். எனவே, ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்,’ என கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில், ‘அண்ணா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்’ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், ஜெகனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாதங்கள் அனைத்தையும் நிறைவு செய்து, சில தினங்களுக்கு முன் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பர்தீக் ஜலன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ‘ஓய்எஸ்ஆர் காங்கிரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் தெளிவான அனுமதியை வழங்கி உள்ளது. அதனால், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த அடிப்படை முகாந்திரமும் கிடையாது என்பதால், மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: