×

பிளஸ் 2 தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: பிளஸ் 2 தேர்வு குறித்து 37 மாவட்ட கல்வி அலுவலர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். நாளை சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதா, இல்லையா என்பது குறித்து முதலமைச்சர் கேட்டுக்கொண்ட படி நாளை சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன. அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்.

தேர்வை நடத்தவில்லை எனில் மேற்படிப்புக்கு மாணவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வை நடத்துவதா இல்லையா என்பது குறித்து முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார். திடீரென நீட் தேர்வு நடைபெற்றால் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. பிளஸ் 2 தேர்வு குறித்து சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது.



Tags : Legislative Party ,Minister ,Love Mahesh , HSC Exam
× RELATED தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு...