×

2ஆம் அலையை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி; இந்தியாவுக்கே வழிகாட்டும் கேராளாவின் கொரோனா நிதி ஒதுக்கீடு

திருவனந்தபுரம்: கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பட்ஜெட்டில் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் 2வது முறையாக பதவியேற்றுள்ள பினராயி விஜயன் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்தார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் கடந்த ஆண்டில் கேரளா அரசு கொரோனாவுக்காக செலவிட்ட தொகை இந்தியாவுக்கே முன்மாதிரியாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பட்ஜெட்டில் கொரோனாவை எதிர்கொள்வதற்காக 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ள 2,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

8,300 கோடி கடன்களுக்கான வட்டி மானியமாகவும், 8,900 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி உதவி தொகையாகவும் வழங்க ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.



Tags : Kerala ,Corona ,India , corona
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...