×

வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு

தேனி: வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இதில் 67.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு இருப்பதால் பெரியாறு பிரதான கால்வாய் பகுதி பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அணையின் 7 பெரிய மதகுகள் வழியாக தண்ணீரை திறந்து வைத்தனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணையில் இருந்து ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். இதன்மூலம் திண்டுக்கல் மதுரை மாவட்டத்தில் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.



Tags : Vaikai dam , vaigai dam
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை வைகை அணையில் குறையாத நீர்மட்டம்