×

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!: ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடர்கிறது..ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு..!!

டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக்கொள்கைக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடர்வதாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிக்கப்பட்டுள்ளதாக என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். 


இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல் 2021 - 2022 நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும்  சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதற்காக பணத்தினை இன்னொரு வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தினை டெபாசிட் ஆக பெறுகின்றன. அதற்கு அந்த வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் வழங்கப்படும். ஆனால் வங்கிகள் கடன் வழங்குவதற்கு இந்த டெபாசிட் தொகை மட்டுமே போதுமானதாக இருக்காது. 


இதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன்களை பெறுகின்றன. இது நீண்டகால கடன், குறுகிய கால கடன் என்று பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து ஒரு வட்டியை வசூலிக்கிறது. இதில் குறுகிய காலகடன்களுக்கு வசூலிக்கும் வட்டியே ரெப்போ விகிதம் ஆகும். இதே நீண்ட கால கடங்களுக்கு வசூலிக்கும் வட்டிக்கு பேங்க் ரேட் எனப்படும். ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Reserve Bank ,Energy Ganddas , Banking, Short Term Lending, Interest Rate, Reserve Bank Governor Shakti Kandadas
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு