×

கோவில்பட்டி அருகே சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் கி.ரா உடல் தகனம்: சபாநாயகர், அமைச்சர்கள், எம்பிக்கள் அஞ்சலி

கோவில்பட்டி: கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது முதிர்வு காரணமாக கடந்த 17ம் தேதி புதுச்சேரியில் உயிரிழந்தார். கி.ராவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து கி.ராவின் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக இடைச்செவல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது. அங்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து நேற்று கி.ராவின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்தில் இறுதிச்சடங்கு நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்பிக்கள் கனிமொழி, வெங்கடேசன், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சதன் திருமலைக்குமார், ரகுராமன், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கி.ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது.  …

The post கோவில்பட்டி அருகே சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் கி.ரா உடல் தகனம்: சபாநாயகர், அமைச்சர்கள், எம்பிக்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Govilbatti ,Raw Body Dahanam ,Govilpatti ,K.K. Kg ,Raw. Rajanarayanan ,BC ,Raw Body Dahana ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் வெறி நோய் தடுப்பூசி முகாம்