ஊரடங்கில் ஊர் சுற்றிய பாலிவுட் நடிகர் நடிகை மீது வழக்கு

சென்னை: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப், இந்தியில் பாகி, முன்னா மைக்கேல், வார், ஸ்டூடண்ட் ஆப் தி இயர் உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் திஷா பதானி. சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் ஜோடியாக ராதே என்ற படத்திலும் நடித்திருந்தார். டைகர் ஷெராப், திஷா பதானி இருவரும் உயிருக்குயிராக காதலிக்கின்றனர். இந்நிலையில் இருவரும் மும்பையில் ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது 188, 34 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவு என்பதால், இருவரும் கைது செய்யப்படவில்லை. இத்தகவலை மும்பை போலீஸ் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories:

>