×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் எலினா, மெட்வேதேவ்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ரஷ்யாவின் மெட்வேதேவ் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர். இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்னை ஆன் லியுடன்(75வது ரேங்க்), நேற்று மோதிய உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா(6வது ரேஙக்) 6-0, 6-4 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு தகுப் பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி 14நிமிடங்களில் முடிவுக்கு  வந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில்  ரஷ்யா வீரர் டேனில் மெட்வேதேவ்(2வது ரேங்க்)  3-6, 6-1, 6-4, 6-3 என்ற செட்களில் அமெரிக்க வீரர் டாம்மி பாலை(52வது ரேங்க்) வீழ்த்தி 3வது சுற்றில் விளைாட உள்ளார். இந்த ஆட்டம் 2மணி 18 நிமிடங்கள் நீடித்தது.

உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா) நேற்று 45வது ரேங்க் வீராங்கனை மேக்தா லினெட்(போலாந்து) உடன் மோதினர். காயம் காரணமாக ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய ஆஷ்லி முதல செட்டை 1-6 என்ற புள்ளி கணக்கில் இழந்தார். இரண்டவது செட் 2-2 என்ற புள்ளி கணக்கில் இருந்த போது ஆஷ்லி, தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால் மேக்தா 3வது சுற்றுக்குள் நுழைந்தார். இடுப்பில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஆஷ்லி விலகியது டென்னிஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மற்ற ஆட்டங்களில் அமெரிக்க வீராங்கனைகள் சோபியா கெனின், ஜெசிகா பெகுலா, ஒன்ஸ் ஜெபேயூர்(துனிஷியா), கரோலினா முசோவா(செக் குடியரசு), மார்டா கொஸ்ட்யுக்(உக்ரைன்), இத்தாலி வீரர் மேட்டியோ பெர்ரெட்டினி, சூன்வூ க்வான்(கொரியா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

* போபண்ணா நம்பிக்கை
ஆடவர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் ரோகன் போபண்ணா(இந்தியா/40வது ரேங்க்), ஃபிராங்கோ குகோர்(குரோஷியா/37வது ரேஙக்) இணை, நேற்று அமெரிக்க வீரர்கள் நிகோலஸ் மோன்ரோ(77வது ரேங்க்), பிரான்சஸ் டிய்போய்(74வது ரேஙக்) இணையுடன் மோதியது. சுமார் ஒரு மணி 20 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் போபண்ணா இணை 6-4, 7-5 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறியது. இரட்டையர் பிரிவில் மட்டும் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வெளியேறிய நிலையில் போபண்ணா வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Elena ,Medvedev ,French Open , Elena, Medvedev in the 3rd round of the French Open tennis
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்: எலெனா ரைபகினா 3வது சுற்றுக்கு தகுதி