உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கினார்

தண்டையார்பேட்டை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி முன்னிலை வகித்தார். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தில் சென்னையில் இதுவரை 17,315 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 14,489 மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 204 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 3வது கட்டமாக 28 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், காது கேளாதோருக்கான கருவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,’’ என்றார். நிகழ்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.    

Related Stories:

>